பெண்கள் பெயரில் நிலம்….! ரூ.5,00,000 மானியம் தரும் தமிழக அரசு…. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

Spread the love

பெண்களுக்காக தமிழக அரசு புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய கூலி பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் விவசாயம் செய்வதற்காக புதிய நிலம் வாங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசால் அந்த நிலத்தில் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் மானியமாக கொடுக்கப்படும். மீதி தொகைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் உதவி கிடைக்கும்.

புதிதாக வாங்கும் இந்த நிலத்திற்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100% முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பயனாளிகள் நிலத்தை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 2 1/2 ஏக்கர் நன்செய் நிலம் 5 ஏக்கர் புன்செய் நிலம் வரை இந்த திட்டத்தின் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 18 முதல் 55 க்குள் வயது இருக்க வேண்டும். அவர்கள் விவசாயம் செய்பவராகவோ விவசாயக் கூலியாகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் விடாமல் இருப்பது அவசியம். இதுவரை விண்ணப்பதாராரரோ அவரது குடும்பத்தினரோ தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பதாரருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கக் கூடாது.

இந்த திட்டத்தின் மூலம் வாங்கும் நிலத்தை பத்து ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. வாங்கப்படும் நிலம் எஸ்சி எஸ்டி பிரிவை சார்ந்த நில உரிமையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் newscheme.tahdco.com என்ற தாட்கோவில் அதிகாரப்பூர்வ இனிய தளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Devi Ramu

Recent Posts

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

9 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

17 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

13 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago