Categories: சினிமா

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும் பல தமிழ் திரைப்படங்களில் இவர் சண்டைக்காட்சி அமைப்பாளராக பணியாற்றி இருக்கின்றார். தனது 20 வயதில் 23 கலைகளை கற்றுக் கொண்ட இவர் 1987 ஆம் ஆண்டு படைவிரட்டுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

அந்த போட்டியில் புரட்சித்தலைவரால் கவரப்பட்ட இவர் பின்னர் சென்னைக்கு வந்து அவரது வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். அவரின் சினிமா ஈர்ப்பை பார்த்த புரட்சித் தலைவர் அவருக்கு ஜாகுவார் தங்கம் என்று பெயர் சூட்டில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 987 படங்களுக்கு ஸ்டாண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கின்றார்.

ஐந்து படங்களுக்கு தமிழக அரசு விருது பெற்றிருக்கின்றார். இவரின் மனைவி சாந்தி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் விஜய சஞ்சீவி, ஜாகுவார் ஜெய் தொடர்ந்து 38 ஆண்டுகளாக சினிமா துறையில் ஸ்டன்ட் மாஸ்டராக கலக்கி வரும் இவர் தற்போது திரைப்படங்களையும் இயக்கி வருகின்றார். தனது மகன்களை வைத்து இவர் இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்தது சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் தனக்கு நடந்த அட்டூழியங்கள் அனைத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். அதாவது “அவரது மகன்கள் மற்றும் மனைவி சேர்ந்து தன்னை பைத்தியம் என பட்டம் கட்டி தனது வீட்டை எல்லாம் தனக்கு தெரியாமலேயே லீசுக்கு விட்டிருந்தார்கள். அதையெல்லாம் கிட்டத்தட்ட 50 லட்சம் கொடுத்து நான் சரிகட்டி இப்போது திரும்ப பெற்றிருக்கின்றேன். அதுமட்டுமில்லாமல் எனது தங்கப் பதக்கங்கள் அனைத்தையும் கணக்கே தெரியாமல் அடகு வைத்து இருக்கிறார்கள்.

எனக்கு விஷம் கொடுத்து கொள்ளக்கூட முயற்சி செய்து இருக்கிறார்கள் என்று மனவேதனையை பகிர்ந்து இருக்கின்றார். தனது மனைவிக்கு மொத்தம் 36 சவரனில் தாலி செயின் போட்டு இருந்ததாகவும், அந்த தாலி செயினை தற்போது அவரிடம் கேட்டால் எங்கு போனது என்று தெரியவில்லை என்று சொல்கிறார். எனது மகன்கள் எனது வீட்டில் இருக்கக் கூடாது. அவரை வீட்டை விட்டு வெளியில் சென்று தனியாக இருங்கள் என்று கூறியதற்கு போலீசாரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்து தற்போது கோர்ட்டில் கேஸ் நடந்து வருகின்றது” என்று பேட்டியளித்து இருந்தார்

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago