எத்தனை தடவை மனு கொடுக்குறது?… பஸ்ஸை நிறுத்தலனா நாங்க நகர மாட்டோம்… வீதியில் இறங்கி பஸ்களை சிறைபிடித்த மாணவர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

Spread the love

மேட்சல் பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பேருந்து நிறுத்தத்தில் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் சரியாக நிற்பதில்லை எனக்கூறி பள்ளி மாணவர்கள் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுராரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாததால், தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் வேலைக்குச் செல்லும் ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது குறித்து டெப்போ மேலாளரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்து நிழற்குடையைத் தாண்டி நிற்காமல் அதிவேகமாகச் செல்ல முயன்ற பேருந்துகளின் குறுக்கே சென்று மறித்து, வீதியிலேயே அமர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

மாணவர்களின் இந்த திடீர் தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதியோர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சாய்பாபா நகர் நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Swetha

Recent Posts

“திமுக – அதிமுக ரகசிய கூட்டணியா?… “என்னை மீறி செங்கல்லைக் கூட வைக்க முடியாது!” – தமிழக அரசுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை…!!

மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 minutes ago

ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த CM விஜய்…. மதுராந்தகத்தில் ஒர்க் அவுட் ஆகுமா இந்த ஃபார்முலா?… அதிரும் அரசியல் களம்….!

மதுராந்தகத்தில் இன்று நடைபெறவுள்ள 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்காமல் கூட்டணி கட்சி…

15 minutes ago

“விசிகவில் உச்சகட்ட மோதல்?”…. ரூ.755 கோடி தங்க மோதிர திட்டத்தில் திருமாவளவன் vs வன்னி அரசு…. அதிர்ச்சி திருப்பம்….!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள இருவேறு பார்வைகளும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட…

19 minutes ago

CM விஜய்யுடன் மேடையில் அமமுக MLA…. தவெகவில் ரகசிய இணைப்பு…. கலக்கத்தில் டிடிவி தினகரன்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் முன்னணி சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், தாராபுரத்தில் நடத்திய பிரச்சாரப் பொதுக்கூட்டம்…

23 minutes ago

நார்வேஜியன் 4×4 வொர்க்அவுட்…! இந்த ஒரு பயிற்சியை செய்தால் போதும்…! உங்க இதயத்தை ஸ்ட்ராங்காக வைக்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் இதோ…!

தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் இதயம் தொடர்பான கடுமையான…

1 மணத்தியாலம் ago

சீச்சீ… என்னடா இது கொடுமை… சுவிக்கியில் ஆர்டர் செய்த முட்டைகள்… அழுகிய நிலையில் டெலிவரி… இணையத்தில் வெடித்த உணவு பாதுகாப்பு விவாதம்…!

சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…

1 மணத்தியாலம் ago