மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹூக்லியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் கூரையில் கசிவு ஏற்பட்டதால் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பின் போது குடைகளை பயன்படுத்திக்கொண்டு பாடம் படிக்கிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடக்கப்பள்ளியில் 5 முதல் 10 வயதுடைய சுமார் 68 இளம் மாணவர்கள் உள்ளார்கள். இவர்கள் மழைக்காலங்களில் பள்ளி வகுப்பறைக்குள் குடைகளை பிடித்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி நான்கு வகுப்பறைகள் இடிந்து விழுந்துவிட்டததாம். மற்ற மூன்று அறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாம்.
அவையும் மோசமான நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தா குப்தா கூறுகையில், “தற்போதைய சூழ்நிலை மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மற்றும் வகுப்பறைகளை அவசரமாக சரி செய்ய வேண்டியது அவசியத்தை வழியுறுத்தி பலமுறை அந்த தலைமை ஆசிரியர் அரசிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…