“என் சாவுக்கு டீச்சர் தான் காரணம்”… தீயில் கருகிய 9 ஆம் வகுப்பு மாணவியின் கடைசி வீடியோ… பரபரப்பு வாக்குமூலம்…!

Spread the love

கோவை வால்பாறை அருகே ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மூன்று ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த சக்திவேல் குமரன் என்பவருடைய மூத்த மகள் முத்து சஞ்சனா. ரெட்டி கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி முத்து சஞ்சனா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சுமார் 40 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதனிடையே மாணவி தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தான் படிக்கும் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் சிந்தியா, தமிழ் ஆசிரியர் ராணி பாய், ஆங்கில ஆசிரியர் சியாமளாதேவி ஆகியோர் சக மாணவர்கள் முன்பு திட்டியதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி நேற்று உயிரிழந்த நிலையில் மகளை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பெற்றோர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” பாதுகாப்பு வலையைச் சோதிக்க உயிரைப் பணையம் வைத்த நபர்..! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 'குழந்தைகள் பாதுகாப்பு…

2 minutes ago

“பதவியிலேயே அமரல அதற்குள்ள பித்தலாட்டமா..?” விஜய்யை சீண்டும் திமுக எம்.பி… தமிழக அரசியலில் அனல் பறக்கும் மோதல்..!!

தமிழக அரசியலில் 'மாற்றம்' கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக…

6 minutes ago

“நாங்க ஒன்னும் வெண்ணெய் கிடையாது” ஒரே ஒரு எம்.எல்.ஏ… அவ்வளவுதானா தம்பி? இதையெல்லாம் நாங்க பார்த்தாச்சு… டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.…

10 minutes ago

“மன உளைச்சலா இருக்கு” தூக்கமே வர மாட்டேங்குது… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத கர்ப்பிணி பெண்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

19 minutes ago

“அந்த ஒரு பதிவு” தவெக கூட்டணியை உறுதி செய்தது விசிக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…

31 minutes ago

BIG BREAKING: விஜய் பதவியேற்பு..? இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகப்போகும் முடிவு… பரபரப்பில் தமிழகம்..!!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின்…

35 minutes ago