#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
#image_title
இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
#image_title
tvk தலைவர் விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. இவ்வளவு நாள் விக்ரவாண்டியின் கனமழை கொளுத்தி எடுத்த நிலையில் மாநாட்டிற்காக அந்த கருணை பகவானே கருணை காட்டியதுபோல் மழையும் பெய்யவில்லை. ஆனால் வெயில் மட்டும் இருந்தது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர்.
#image_title
இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார். இந்நிலையில் த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடலை இயற்றிய தெருக்குரல் அறிவு வெளியிட்டுள்ள பதிவில், ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று விஜயிடம் கேட்டேன். அதற்கு அவர் “இதை செய்ய உன்னால் மட்டும்தான் முடியும்” என்றார். என்னை நம்பிய விஜய் சாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…