தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில்நேற்று தெருநாய்கள் கூட்டம் ஒன்று 7 வயது சிறுவனைத் தாக்கியதில் அச்சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். ஹயத்நகர் பகுதியில் சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுவனின் காதுகளை நாய் கடித்துவிட்டதாகவும், இடுப்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நாய்களை விரட்டினர். பின்னர் குழந்தை நல்லகுண்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. நவம்பர் 11 ஆம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவனை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. பாதிக்கப்பட்ட ரித்விக் என அடையாளம் காணப்பட்டவர், ஃபரூக்நகர் மண்டலத்தின் நகுல்பள்ளி கிராமத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது தாக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்படி நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…
அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…