சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் திரைக்கு முன்னும், பின்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2017 ஆம் வருடம் முதலே கூட்டணியில் இருந்து வருகிறது. அதேபோல பாஜகவில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தலை போலவே தனித்து நிற்பதில் உறுதியாக உள்ளார் சீமான்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தல் களத்திற்கு புதிது. திமுக, பாஜகவோடு கூட்டணி அமைக்கமாட்டோம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது. அப்படி என்றால் அதிமுகவோடு விஜய் கூட்டணி அமைப்பாரா? என்று கேள்வி எழுந்தது அதற்கும் வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் நன்கு முனை போட்டி உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் கட்சி நிகழ்வுகளின்போது பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப்படாத வாசகங்கள், இலச்சினைகள், போட்டோஸ் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படக்கூடாது. ” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…