“திமுக-வின் 200+ இலக்கு”… மீண்டும் அதே மைதானம், அதே ராசி.. 2026-ல் திமுக போடப்போகும் மெகா ஸ்கெட்ச்…. அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

Spread the love

தமிழக அரசியலில் திருச்சி சிறுகனூர் மைதானம் என்பது தி.மு.க.விற்கு ஒரு ராசியான மற்றும் சென்டிமென்ட் இடமாக மாறி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இதே சிறுகனூர் மைதானத்தில் தான் ‘தமிழக விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததால், முதல்வர் ஸ்டாலின் சிறுகனூரை ஒரு வெற்றிக் களமாகக் கருதுகிறார்.

தற்போது 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், மீண்டும் அதே சிறுகனூர் சென்டிமென்ட்டை கையில் எடுக்க தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கவும், தொண்டர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் திருச்சியில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக மீண்டும் அதே சிறுகனூர் பகுதி தேர்வு செய்யப்பட இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த 2026 மாநாடு முந்தைய மாநாடுகளை விடப் பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பெரிய அளவிலான மாநில மாநாடு என்பதால், இளைஞர் அணியினரின் பங்களிப்பு இதில் அதிகளவில் இருக்கும். கட்சியின் பத்தாண்டு கால சாதனை விளக்கமாகவும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளின் முன்னோட்டமாகவும் இந்த மாநாடு அமையும் எனத் தெரிகிறது.

திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே மாநாட்டிற்கான இடத்தைப் பார்வையிட்டு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். 2021-ல் வெற்றியைத் தந்த அதே மண், 2026-லும் தங்களுக்குக் கைகொடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தி.மு.க உள்ளது. எதிர்க்கட்சிகளின் சவால்களை முறியடிக்கவும், கூட்டணிக் கட்சிகளிடையே பலத்தை நிரூபிக்கவும் இந்தச் சிறுகனூர் மாநாடு தி.மு.க-விற்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago