6 மாதம் பொறுத்துப் பார்த்துவிட்டு அதன் பிறகு விமர்சிப்போம் என்று தொடக்கத்தில் நாகரிக அரசியல் பேசிய திமுக, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தனது எதிர்ப்புக் கணைகளைத் தீவிரமாக ஏவத் தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தான், தவெக ஆட்சி அமைந்த மூன்றே மாதங்களில் கவிழும்” என்று ஸ்டாலினே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரே இப்படி வெளிப்படையாகக் கூறுவதற்குப் பின்னணியில் ஏதோ ஒரு பலமான காரணம் இருக்கும் என்று உளவுத்துறை தீவிரமாக அலசத் தொடங்கியுள்ள நிலையில், தவெக ஆட்சியை வீழ்த்துவதற்கான சில ரகசிய சதித் திட்டங்கள் பின்னணியில் அரங்கேறி வருவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மக்கள் தீர்ப்பளித்து ஒரு புதிய அரசு அமையும் முன்பே, அதை எப்படிக் கவிழ்ப்பது என்ற நோக்கில் நகர்த்தப்படும் இத்தகைய திரைமறைவு காய்கறல்களும், முன்கூட்டியே கணிக்கப்படும் அரசியல் வீழ்ச்சிகளும் ஜனநாயகப் பண்புகளுக்கு முற்றிலும் முரணானவை என்றும், இது ஒட்டுமொத்த தமிழக அரசியலுக்கும் சற்றும் ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…