திமுகவின் எதிரியாக இருந்தாலும்.. அதிமுகவை நினைத்து வருத்தமாக உள்ளது… முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!

Spread the love

திருச்சியில் இன்று (மார்ச் 9) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக தலைமையிலான NDA கூட்டணி திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “இவ்வாறு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒரு கூட்டணிக்கு எங்களது மாநில மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியதோடு, மாநில உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதையும் உறுதிப்படக் கூறினார்.

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்த அவர், திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக, அதிமுகவைச் சிறுகச் சிறுக விழுங்கி வருவதாகக் குறிப்பிட்டார். “திமுகவின் நேர் எதிரிகளாக இருந்தாலும், அதிமுகவின் தொண்டர்களுக்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தனது விமர்சனத்தை முன்வைத்த ஸ்டாலின், அவர் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறினார். சுயநலத்திற்காக அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கட்சியின் தனித்தன்மையை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

7 minutes ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

12 minutes ago

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

22 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

35 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

44 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

52 minutes ago