தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தமிழகத்தில் தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன; இதனால் ஒட்டுமொத்த மாநிலமும் இரத்தச் சகதியில் சிக்கித் தவிக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றவாளிகள் அச்சமின்றி உலாவுவதாகவும், பொதுமக்கள் பயத்துடன் வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொடர் கொலைகளையும் வன்முறைச் சம்பவங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் இளைஞர் சத்தியசீலன் படுகொலை, திருத்தணியில் மகளுக்குத் தொல்லை கொடுத்தவர் மீது புகாரளித்த தந்தை படுகொலை செய்யப்பட்ட கொடூரம், சேலத்தில் மூதாட்டி ஜனாபாய் நகைகளுக்காகக் கொலை செய்யப்பட்டது மற்றும் திண்டுக்கல்லில் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிய நபர் மனைவி கண்முன்னேயே வெட்டிக்கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி காவல் துறையின் அலட்சியத்தைக் சாடியுள்ளார்.
சென்னை, மதுரை, திண்டுக்கல் என வடக்கு, தெற்கு, மேற்கு என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பட்டப்பகலிலும் நள்ளிரவிலும் வன்முறைகள் கொடிகட்டிப் பறப்பதாகத் தெரிவித்துள்ளார். “வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற சூழலில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா மற்றும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா?” என கேள்வி எழுப்பிய அவர், காவல்துறையினர் மற்றும் ‘சிங்கப்பெண் அதிரடிப் படையினர்’ ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பொதுமக்கள் பாதுகாப்பில் காட்டுவதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், மக்கள் உயிரைக் காப்பதை விட்டுவிட்டு முதலமைச்சர் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இனியும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், ‘Shooting Mode’ போன்ற செயல்பாடுகளில் இருந்து விலகி, உடனடியாகக் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை (“Please Take Action CM Sir”) எடுக்க வேண்டும் என்று அவர் அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்குச் சத்தமில்லாமல் தீங்கு விளைவிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. வீட்டைச்…
திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த வீரபத்திரன் (மேட்டுப்பட்டி),…
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். 'நாட்டாமை' படத்தில்…
சென்னை திருவொற்றியூரில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கடுமையான…
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்தே, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ்…