தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் ஒரு கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆளுநரைச் சந்தித்தார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் தேவை என்ற காரணத்தால் ஆளுநர் மாளிகை அவரது கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்து வந்தது, தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மறுபுறம், திமுக (59) மற்றும் அதிமுக (47) ஆகிய இரு துருவங்களும் இணைந்து தவெக-வின் வருகையைத் தடுக்க ரகசிய வியூகம் வகுப்பதாகத் தகவல்கள் கசிந்தன. இந்த இரு கட்சிகளும் கைகோர்த்தாலும், இதர சிறிய கட்சிகளின் ஆதரவையும் சேர்த்தால் கூட 115 இடங்களையே எட்ட முடிந்தது. பாமக மற்றும் விசிக போன்ற கட்சிகளுக்கிடையிலான அரசியல் முரண்பாடுகளால் ஒருமித்த முடிவை எட்டுவதில் சிக்கல் நீடித்தது. இதனால் தமிழகத்தில் ஒரு அரசியல் முட்டுக்கட்டை உருவாகி, ஆளுநரும் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்த சூழலில் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டும், ஒரு நிலையான ஆட்சியை உறுதிப்படுத்தவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகமுக்கியமான அரசியல் நகர்வை மேற்கொண்டார். தனது கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக ஆகியவை தவெக-விற்கு ஆதரவு அளிப்பதில் தமக்குத் தடையில்லை என ‘பச்சைக்கொடி’ காட்டியதன் மூலம் ஸ்டாலின் ஒரு ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணிக் கட்சிகளைத் தனது பிடியில் வைத்திருக்காமல், நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் வழங்கிய இந்த ‘ஃப்ரீ ஹேண்ட்’ முடிவானது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் முறைப்படி தவெக-வுடன் கூட்டணி வைப்பதாக இன்று அறிவித்துள்ளன. விசிக-வும் இந்த அணியில் இணையும் பட்சத்தில், தவெக-வின் பலம் மேஜிக் நம்பரான 118-ஐ எட்டும். இதன் மூலம் விஜய் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு ‘கூட்டணி ஆட்சி’ அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கூடிய ஆட்சி மலரப்போவது உறுதியாகியுள்ள நிலையில், இந்த புதிய அரசியல் பரிணாமம் தமிழகத்தை எத்தகைய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இடதுசாரி கட்சிகள், தங்களது ஆதரவுடன் சில முக்கிய நிபந்தனைகளையும் ஆலோசனைகளையும்…
கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் நவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னை கிண்டி பகுதியில் தனது தோழிகளுடன் தங்கி தனியார்…
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான சூழல் கனிந்து வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை தங்களது…
தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி வைப்பது குறித்த யூகங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.…
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை "காலத்தின் கட்டாயம்" எனப் பொருள்படும் வகையில்…
அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நிலவி வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று அதிமுக நிர்வாகி…