தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸைத் தக்கவைத்துக்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட அதிரடி சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மாற்று முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், திமுக தனது தரப்பிலிருந்து ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடமளிக்க முடியாது என்ற தனது நிலையில் திமுக உறுதியாக இருந்தாலும், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க முன்வந்துள்ளது. சட்டமன்றத்தின் கௌரவமிக்க பதவியான ‘துணைச் சபாநாயகர்’ பதவியை காங்கிரஸிற்கு வழங்க ஸ்டாலின் முன்வந்துள்ளார். அத்துடன், செல்வாக்குமிக்க 5 அரசு வாரியத் தலைவர்கள் பதவிகள் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவிகளில் குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்கவும் திமுக தரப்பில் தூது அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியில் பங்கு இல்லாவிட்டாலும், அரசு நிர்வாகத்தில் காங்கிரஸிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் இந்தச் சலுகை ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸிற்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என்பதில் திமுக தெளிவான எல்லைக்கோட்டை வகுத்துள்ளது. விஜய்யின் தவெக வழங்கும் ‘துணை முதலமைச்சர்’ என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியையா அல்லது திமுக வழங்கும் இந்த ‘நிச்சயமான அதிகாரத்தையா’ எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை உள்ளது. திராவிடக் கட்சிகளின் தனிப்பெரும் பெரும்பான்மை என்ற கொள்கையில் சமரசம் செய்யாமல், அதே சமயம் கூட்டணிக் கட்சியைத் தக்கவைக்கும் ஸ்டாலினின் இந்த நகர்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…