தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு குறித்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சென்னைக்கு வருகை தந்த ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரம் கோரியதாகவும், ஆனால் ஸ்டாலின் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் விவகாரத்திலும், தவெக தலைவர் விஜய் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும் ராகுலுக்கும் இடையே நிலவிய அதிருப்தியே இந்த திடீர் சந்திப்பு மறுப்பிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக மூத்த தலைவர் துரைமுருகனை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தபோது இந்த அரசியல் விவகாரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி உங்களைச் சந்திக்க நேரம் கேட்டபோது அதற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும்; அந்தச் சந்திப்பு விஜய் மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த உதவியிருக்கும் என்று துரைமுருகன் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறத
துரைமுருகனின் இந்த ஆலோசனையைக் கேட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. “துரோகிகளை பக்கத்தில் சேர்க்க வேண்டுமா? இனி அவர்களுடன் எந்தச் சூழலிலும் ஒட்டுதல் கூடாது; காங்கிரசை விஜய்யே அழித்துவிடுவார், அது நடக்கும்போது அவர்கள் உணரட்டும்” என்று ஸ்டாலின் கூறியதாக திமுக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா மலைக் கோயில் வளாகத்தில், பெண் பக்தர்களிடம் சிலர் தகாத முறையில்…
குஜராத் மாநிலத்தில் சாலையோர நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதியதில், தாயும்…