“தீர்ந்து போன சக்தியிடம் திருடுகிறவர்” எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பாரு..? முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!

Spread the love

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முந்தைய திமுக அரசின் கோரிக்கைகளையும், சாதனைகளையும், கொள்கை விளக்கக் குறிப்பையும் தான் முதல்வர் விஜய் அப்படியே பேசி இருக்கிறார் என்று குற்றம் சாட்டிய அவர், “தீர்ந்து போன சக்தியிடமே திருடுகிறவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார்” எனச் சாடினார்.

முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தான் டெல்லி சென்றபோது, பாஜக காலில் விழுந்து மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக விஜய் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தற்பொழுது கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவே விஜய் டெல்லிக்குச் சென்றாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் ‘ஷாப்பிங்’ செய்வதாகவும், பிற மாநிலங்களில் பாஜக செய்வதை ஜெராக்ஸ் காப்பி போல விஜய் தமிழகத்தில் செய்து வருவதாகவும், ஆட்சி நிர்வாகம் ஒன்றும் சினிமா இல்லை என்றும் அவர் கடுமையாக வறுத்தெடுத்தார்.

இதே கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கைதாங்கலாக அறிவாலயத்திற்கு வந்த பொழுது, அவரை வரவேற்க அங்கு ஒரு நிர்வாகியும் வரவில்லை. இதனால் பெரும் விரக்தி அடைந்த துரைமுருகன், வந்த வழியே உடனே திரும்பிப் போய் விட்டார் என்றும், காரில் ஏறி புறப்படும்போது “கூட்டம் அதிகமாக இருக்கிறது; எனக்கு தொற்று ஏற்பட்டு விடும்” எனத் தன் ஆதரவாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றதாகவும் இந்த நிகழ்வின் பின்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago