Categories: சினிமா

என்ன அண்ணாச்சி, நீங்க இப்படி பண்ணலாமா..? லெஜெண்ட் சரவணனனால் சிரமத்துக்கு உள்ளான சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் நடிக்க முன்பு போல அழகும், திறமையும், நடிப்பாற்றலும் தேவையே இல்லை. நடிகர், இயக்குநர், அரசியல்வாதி இவர்களில் யாராவது ஒருவரது வாரிசாக இருந்தால் மிக மிக எளிதாக சினிமாவில் நடித்து விடலாம். அல்லது பெரிய தொழிலதிபராக பெட்டி, பெட்டியாக கரன்ஸி கட்டுகளை வைத்திருந்தாலும் எளிதாக நடிகராகி விடலாம். அவருடன் யார் வேண்டுமானாலும் நாயகியாக நடிக்க வருவர். ஏனென்றால் சினிமாவை நிர்வகிப்பது கரன்ஸி தாள் கட்டுக்கள் தானே தவிர, கலை அல்ல. இதுதான் இன்றைய நிஜம்.

அப்படித்தான் இந்தியா முழுவதும் கிளைகளை கொண்ட பரந்துவிரிந்த நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், இப்போது லெஜண்ட் படத்தில் நடித்த பிறகு லெஜண்ட் சரவணன் என அழைக்கப்படுவர், சினிமா நடிகராக மாறினார். லெஜண்ட் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்த அவர் அதையே தனது புகழ் பெயராக அடைமொழியாக மாற்றிக்கொண்டார். இப்போது கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரை இயக்குநராக வைத்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக துரை செந்தில்குமாருக்கு 3 மடங்கு சம்பளத்தை வாரி தந்திருக்கிறார்.

ஆனால் இவரது கடைக்கு சென்ற சில வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அது, சரவணா ஸ்டோர்ஸ்சில் காலை முதல் இரவு வரை சுமார் 200 முறை இவர் நடித்த லெஜண்ட் படத்தில் இருந்து ஒரு பாடலை அங்குள்ள டிவிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு நிற்கவே முடியாத அளவுக்கு அந்த பாட்டும், இசையும், சத்தமும் மனதை உளைச்சலடைய செய்கிறது. அமிர்தமே என்றாலும் அளவுக்கு மீறினால் நஞ்சுதானே. ஆனால் இதை நாள் முழுவதும் திரும்ப திரும்ப கேட்டு அங்குள்ள பணி செய்யும் ஊழியர்களின் நிலையை நினைத்தால், அதுவும் ஆண்டுக்கணக்கில் இது தொடர்ந்தால், காதுகளில் பஞ்சை வைத்து அடைத்தால் கூட அங்கு பணிசெய்ய முடியாத ஒரு நிலைதான்.

வீட்டில் ஒரு சேனலில் திரும்ப திரும்ப வரும் விளம்பரங்களை பார்த்தாலே வேறு சேனலை மாற்றிவிடுகிறோம். ஆனால் ஒரே பாட்டை காலைமுதல் இரவு வரை தினமும் கேட்டு, அதுவும் வாரக்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் என்றால், இனியாவது அந்த பாட்டை நிறுத்திவிட்டு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை அங்குள்ள டிவிகளில் ஒளிபரப்ப லெஜண்ட் சரவணன் முன்வருவாரா? என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

8 minutes ago

அமெரிக்கா Vs ஈரான்… போர் முடிவுக்கு வருமா, தீவிரமாகுமா?… ஈரானை அலறவிட்ட வான்ஸ்… அமெரிக்க துணை அதிபரின் அதிரடி எச்சரிக்கை…!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…

12 minutes ago

“இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்…” நேற்று உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றமா…? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!!

நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித…

14 minutes ago

அதிர்ச்சி..! ரூ.100 கோடி நில மோசடி… வசமாகச் சிக்கிய பெண் ஊழியர் & வழக்கறிஞர்… பெண் ஊழியரின் ரகசிய பிளான் அம்பலம்… பின்னணியில் யார்?…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த…

21 minutes ago

“என் வீட்டை விட்டுப் போக மாட்டேன்”… மூதாட்டியால் ஸ்தம்பித்த நாடு… 87 வயதில் புரட்சி செய்த மாரி கார்மென் காலமானார்… உலகையே கலங்க வைத்த மரணம்…!!

ஸ்பெயின் நாட்டில் எளிய மக்களின் வீட்டு உரிமைக்கான போராட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய 87 வயதான மாரி கார்மென் காலமானார்.…

29 minutes ago

அதிர்ச்சி கிளப்பிய டிரம்ப்… “8 போர்களை நிறுத்தினேன்… எனக்கு நோபல் பரிசு எங்கே?”… நோபல் பரிசுக்காக டிரம்ப் போட்ட புதிய கணக்கு… வெடித்த சர்ச்சை…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச அளவில் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான்…

34 minutes ago