சீனாவில் நடைபெற்ற ஒரு பொதுக் கண்காட்சியின் போது, நடனமாடிக்கொண்டிருந்த ரோபோ ஒன்று சிறுவன் ஒருவனைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இசைக்கு ஏற்ப அந்த ரோபோ உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தது.
அப்போது அதன் அருகே நின்றிருந்த ஒரு சிறுவன் ரோபோவின் அசைவுகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த ரோபோ தனது இயந்திரக் கையால் சிறுவனின் முகத்தில் ஓங்கி அறைந்தது. இதனால் நிலைதடுமாறிய அந்தச் சிறுவன் வலியால் அலறினான்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரோபோவின் கட்டுப்
“>
பாட்டில் மாற்றம் ஏற்பட்டதா அல்லது அதன் சென்சார்களில் ஏற்பட்ட பிழையா என்பது குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மனிதர்களோடு நெருக்கமாகப் பழகும் வகையில் உருவாக்கப்படும் ரோபோக்களின் பாதுகாப்புத் தன்மை குறித்தும், குறிப்பாக பொது இடங்களில் குழந்தைகளுடன் இத்தகைய இயந்திரங்களை அனுமதிப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…