#image_title
தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என்றால் அது மதுரை தான். மதுரை என்றாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் பல சிறப்பம்சங்களை கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகும். மதுரையே மீனாட்சி அம்மன் கையில் தான் இருக்கிறது அவள் தான் மதுரையின் காவல் தெய்வம் என்று கூறுவர். தேவார பாடல் பாடப்பட்ட திருத்தலம் இதுவாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு விசேஷங்கள் நடைபெறுவதுண்டு. சித்திரை திருவிழா மிகவும் முக்கியமானது. அதைத் தொடர்ந்து நவராத்திரி, ஆவணி மூலத் திருவிழா, தை தெப்ப திருவிழா, ஆடி பூராம் என பல்வேறு விசேஷங்கள் இந்த கோயிலில் இருக்கிறது. இன்று அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. இந்த கோவிலை சுற்றி 12 கோபுரங்கள் இருக்கின்றன.
கோவிலை சுற்றி நான்கு திசைகளிலும் பிரம்மாண்டமான நான்கு கோபுரங்கள் இருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த கோபுரங்களிலும் 33 ஆயிரம் சிற்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு ஆயிரம் கால் மண்டபம். ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது இது என்று கூறுகிறார்கள். கோயிலை சென்று ஒரு முறை தரிசித்தாலே அங்கு இருக்கும் கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமும் நம்மளை வியப்பில் ஆழ்த்தும்.
அப்படி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற தீபாவளி அன்று அபூர்வ காட்சி நடைபெற இருக்கிறது. அது என்னவென்றால் மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடமும் தங்க கவசமும் சுந்தரேஸ்வரருக்கு வைரத்தால் ஆன பட்டையும் சாற்றப்பட்டு அலங்காரம் செய்ய போவதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதை அறிந்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு அம்பாளை வைரகிரிடம் தங்க கவசத்துடன் காண காத்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…