முதலமைச்சர் விஜய்யின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த திமுக, விசிக… EPS எடுத்த திடீர் யு-டர்ன்… சட்டசபையில் வெடித்த பூகம்பம்….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிரான அரசினர் தனித்தீர்மானம், மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் போது, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழகம் போன்ற தென்மாநிலங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தின் பேரிலேயே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இத்தீர்மானத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சுட்டிக்காட்டினார்.

இத்தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியுடன் இணைந்து பல்வேறு முன்னணி எதிர்க்கட்சிகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. திமுக சார்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு” எனக் கூறி தீர்மானத்தை ஆதரித்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ செல்லச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமசந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைச்சர் வன்னி அரசு மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி ஆகியோர் தென்மாநிலங்களின் குரல்வளை நசுக்கப்படுவதாகக் கூறி இத்தீர்மானத்திற்குத் தங்கள் முழு ஆதரவை தெரிவித்தனர்.

அதேவேளையில், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இத்தீர்மானத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறு ஏதும் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்தை அதிமுக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், வரும் தேர்தல்களில் மகளிருக்கு 33 சதவீத தொகுதி ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தின் குறிப்பிட்டப் பகுதியை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகத் தெளிவுபடுத்தினார். பாமகவின் கணேஷ்குமார், ஆதாரமற்ற செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் விமர்சித்து எதிர்த்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இத்தீர்மானத்தின் மீது தனித்துவமான கருத்துக்களை முன்வைத்தார். மக்கள் தொகை வரம்பை 10 லட்சத்திற்கு ஒரு எம்.பி என்பதற்குப் பதிலாக, 7 முதல் 8 லட்சத்திற்கு ஒரு எம்.பி என மாற்றியமைத்தால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 59 ஆக உயரும் என்ற கணக்கீட்டை முன்வைத்தார். மேலும் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்ற அவர், இத்தீர்மானத்திற்குத் தெளிவான ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்காமல் நடுநிலை வகித்தார்.

ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யாத நிலையில், இத்தீர்மானம் அவசியமா என்ற கேள்விகளுக்குச் சபாநாயகர் விளக்கமளித்தார். பிரச்சனை வந்த பிறகு சந்திப்பதை விட, மாநில உரிமைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதே சிறந்த ராஜதந்திரம் என்றும், இந்தியாவிற்கே வழிகாட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை எடுப்பதன் தொடர்ச்சியே இத்தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டு விவாதத்தை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

8 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

24 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

35 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

38 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

48 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

59 minutes ago