தருமபுரி சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் சவுமியா அன்புமணி, இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த அவர், தற்போது சட்டமன்றக் களத்தில் இறங்கியுள்ளார். பாமகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, தேர்தல் ஆணையம் மாம்பழச் சின்னத்தை அன்புமணி தரப்பிற்கே ஒதுக்கியுள்ள நிலையில், சவுமியா அன்புமணி உற்சாகத்துடன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். சவுமியா அன்புமணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 65.94 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 17.15 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 48.79 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் அடங்கும். அவரது கணவர் அன்புமணி ராமதாஸிற்கு ரூ. 1.51 கோடி அசையும் சொத்துகளும், ரூ. 6.85 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபரணங்களைப் பொறுத்தவரை, சவுமியாவிடம் ரூ. 4.26 கோடி மதிப்பிலான 2,927 கிராம் தங்க நகைகளும், ரூ. 1.64 கோடி மதிப்பிலான வைர நகைகளும் உள்ளன. மேலும், ரூ. 68.74 லட்சம் மதிப்புள்ள 26.44 கிலோ வெள்ளிப் பொருட்களும் அவரிடம் உள்ளன. அன்புமணி ராமதாஸிடம் ரூ. 1.39 கோடி மதிப்பிலான 960 கிராம் தங்கமும், ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான 2.50 கிலோ வெள்ளியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களைப் பொறுத்தவரை, ரூ. 53.59 லட்சத்தில் பென்ஸ் காரும், ரூ. 9.47 லட்சத்தில் ஹோண்டா ஜாஸ் காரும் சவுமியா வசம் உள்ளன.
கையில் இருக்கும் ரொக்கப் பணமாகச் சவுமியாவிடம் ரூ. 2.25 லட்சமும், அன்புமணி ராமதாஸிடம் ரூ. 60 ஆயிரமும், அவர்களது மகள் சஞ்சுத்ராவிடம் ரூ. 20 ஆயிரமும் இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. சொத்து விவரங்கள் மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களையும் சவுமியா அன்புமணி தனது பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளான இன்று இத்தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
https://drive.google.com/file/d/1L4kIGWAvM3les4j3lm8RXTzdM4cvlB54/view
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…