மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவில் புதிய வகை சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் ‘மஹாநகர் காஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. எரிவாயு கட்டணம் நிலுவையில் இருப்பதாகக் கூறி, போலி குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி, இணைப்பைத் துண்டிக்கப்போவதாக வாடிக்கையாளர்களை அச்சுறுத்தி அவர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர்.
இந்த மோசடி கும்பல் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்த 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து, அவர்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணத்தைச் சுருட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2.7 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவது மட்டுமின்றி, புதிய எரிவாயு இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடமும் இக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் கவனக்குறைவைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் இத்தகைய ஆன்லைன் மோசடிகளிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…