சுவேதா சர்மா என்ற பெண்மணி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோனி நிறுவனத்தின் ஹோம் தியேட்டரை ஆசையுடன் வாங்கியுள்ளார். ஆனால், மின்சார வோல்டேஜ் மாறுபாடு காரணமாகச் சில நாட்களிலேயே அந்த ஹோம் தியேட்டர் பழுதாகியுள்ளது. வாரண்டி காலத்தில் இருக்கும் அந்தச் சாதனத்தைச் சரிசெய்யச் சோனி சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றபோது, பழுதுபார்ப்பதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரீமியம் பிராண்டான சோனி நிறுவனம், வாரண்டி காலத்திலேயே பழுதுபார்ப்பற்குக் கட்டணம் கேட்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் உள்ளதாக அந்தப் பெண் எக்ஸ் தளத்தில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “மின்சார மாறுபாட்டால் ஏற்படும் பழுதுகளுக்கு வாரண்டி பொருந்தாது என நிறுவனங்கள் சாக்குப்போக்கு சொல்கின்றன; நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுங்கள்” எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…
பசியால் வாடும் ஒரு சிறு குழந்தை, உயிர் பிழைப்பதற்காக ஒரு துண்டு ரொட்டியை நாடும்போது அதன் மீது வன்முறையைப் பிரயோகிப்பது…
மறு கேஒய்சி படிவத்தைச் சமர்ப்பித்தும் கணக்கு புதுப்பிக்கப்படாமல் தாமதமடைவது, வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் சந்திக்கும் மிகப்பெரிய சிரமங்களில் ஒன்றாகும். வங்கி…
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் வால் பகுதியில் இருந்த 'டெயில் ரோட்டார்' அமைப்பில் திடீரென ஏற்பட்ட மெக்கானிக்கல் பழுது…
தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர்…