மது குடிக்க பணம் தராததால் தாய் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த விக்டர் ராஜேந்திரன் மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அவருடைய தாய் எஸ்தருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த விக்டர் ராஜேந்திரன் தனக்கு குடிப்பதற்காக பணம் தர வேண்டும் என்று கேட்டு தாயை தொந்தரவு செய்துள்ளார்.
ஆனால் மது அருந்துவதற்கு அவருடைய தாய் எஸ்தர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விக்டர் ராஜேந்திரன் தாய் என்றும் பார்க்காமல் மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் தாய் வழியால் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ராஜேந்திரனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…