ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது. இதை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பை கொண்டு வாரம் வாரம் விவாதிக்கப்படும். அந்தவகையில் கடந்த வாரம் குடும்பத்தின் சூழ்நிலை யில் மாற்றம் அளிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் இருந்தது. இதில் ஒரு மகன் தன்னுடைய தந்தை இல்லாமல் மாற்றுதிறனாளி ஆன தன்னுடைய தாய் தங்களை வளர்ப்பதற்கு பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய தாய் விதவை என்பதால் பூ வைக்காமல் இருந்த அம்மாவிற்கு பூ கொண்டு வந்து தலையில் வைத்து அழகு பார்த்துள்ளார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த அரங்கத்தையும் கண்கலங்க வைத்துள்ளது.
