அதிமுக-வின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலுக்குப் பிறகு திமுக-வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினரானார். மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற நோக்கில் அவர் எடுத்த இந்த முடிவு, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு இதில் சற்றும் உடன்பாடில்லை. அவர் தனது தந்தையை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு வலியுறுத்திய நிலையிலும், ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்ந்தார்.
சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஓபிஎஸ் மூலமாக வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவில் வாய்ப்பு பெறுவது கடினம் என்பதால், ரவீந்திரநாத் தவெக-வில் இணைய ஆர்வம் காட்டினார். பனையூரில் உள்ள தவெக தலைமைக்கு தூது அனுப்பியபோதும், ஓபிஎஸ்-உடன் வந்தால் மட்டுமே செல்வாக்காக இருக்கும் எனத் தவெக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், ஏற்கனவே தவெக சென்ற முன்னாள் அதிமுக உறுப்பினர்களின் நிலைமையைக் சுட்டிக்காட்டி, மகனின் இந்த முடிவுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு தயக்கம் காட்டி வருகிறார்.
ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வில் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என ரவீந்திரநாத் கணக்குப் போடுகிறார். அதேவேளையில், அதிமுக-வில் இருந்து விலகி தவெக-விற்கு வந்த பலர் முக்கிய பதவிகளைக் கேட்கும் சூழலில், அவர்கள் மீதான தொடர் விமர்சனங்கள் காரணமாக அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்க தவெக தலைமையோ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் மனக்கசப்பு நிலவி வருகிறது.
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…
ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…