தருமபுரி அருகே கஞ்சா போதையில் இருந்த 19 வயது இளைஞர் ஒருவர், தனது பெற்ற தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே தேவராஜ் (19) என்ற இளைஞர் கஞ்சா போதையில் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரேதத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் தேவராஜைக் கைது செய்தனர்.
கைதான தேவராஜ் சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையினரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் சிறை சென்று, சில தினங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சா போதையால் பெத்த தாயையே மகனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…