Categories: சினிமா

அட்ரா சக்கை… 50 லட்சம் ரூபாய் லாபமா? கோர்ட் கேஸ்ன்னு போனது வீணாகப் போகலையே? – இசையமைப்பாளருக்கு கொண்டாட்டம்தான்!

Spread the love

சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படம் வெளியானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் நல்ல லாபத்தை தான் கொடுத்திருக்கிறது. டியூட் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் புது நெல்லு புது நாத்து படத்தில் இடம்பெற்ற கருத்த மச்சான் என்ற பாடலும், பணக்காரன் படத்தில் இடம்பெற்ற நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடலும் சேர்க்கப்பட்டு இருந்தது. தனது அனுமதியின்றி தனது இசையில் உருவான பாடல்களை டியூட் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை ஐ கோர்ட்டில் நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டியூட் படத்தில் இளையராஜா இசையமைத்த 2 பாடல்களை பயன்படுத்தியதற்காக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இளையராஜாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கியதாக கூறப்படுகிறது. அடேங்கப்பா 2 பாடலுக்கு 50 லட்சமா என ரசிகர்கள் வாய்பிளந்த நிலையில், அந்த காலத்தில் இசையமைத்த அந்த ஒரிஜினல் பாடல்களுக்கே இளையராஜாவுக்கு இந்த சம்பளம் அவர்கள் தந்திருக்க மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

Elango

Recent Posts

காதலி கொடுத்த ‘டெத் வாரண்ட்’..! “மன்னிப்பு கேட்டும் விடல” நள்ளிரவில் வரவழைத்து.. காதலனுக்கு காத்திருந்த பயங்கர ஷாக்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.…

16 minutes ago

“ஐயோ மறந்துட்டேன்” கே.சி. கருப்பணன் செய்த தவறு… MLA-ஆக பதவியேற்கவில்லை… பெரும் பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…

26 minutes ago

மாறிய கட்சி… மாறாத விசுவாசம்..! ‘ஜெயலலிதா’ புகைப்படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…

38 minutes ago

உதயநிதி, EPS யாருமே செய்யாததை செய்த OPS.. நெகிழ்ந்துபோன முதல்வர் விஜய்.. இதுதான் அரசியல் நாகரீகம்..!!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…

51 minutes ago

BIG BREAKING: அமைச்சர் கீர்த்தனா MLA-ஆக பதவியேற்கவில்லை… சட்டப்பேரவையில் அதிர்ச்சி..!!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…

1 மணத்தியாலம் ago

BREAKING: சவரனுக்கு ரூ.400 குறைந்தது.. நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!!

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…

1 மணத்தியாலம் ago