கிருஷ்ணகிரி மாவட்டம் தும்பலபள்ளி கிராமத்திற்கு அருகே இருக்கும் பாறை மேல் கடந்த 18ஆம் தேதி ஆனின் உடல் கிடந்தது. அதற்கு அருகே பீர் பாட்டில் விஷ பாட்டில், விஷ மருந்து பாக்கெட்டுகள், இருந்துள்ளது. இதுகுறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது சடலமாக மீட்கப் பட்டவர் திப்பனபள்ளி பகுதியைச் சேர்ந்த முனியப்பன்-பார்வதி தம்பதியினரின் மகன் தனுஷ் குமார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தனுஷ் குமாருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில நாட்களுக்கு அனிதாவை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவர் வேறு யாரிடமும் பேசிக்கொண்டிருந்தார்.
இரவு முழுக்க அவர் வாட்ஸப்பில் இருந்ததால் தனுஷ் குமாருக்கு சந்தேகம் வந்தது. இது குறித்து விசாரித்த தனுஷ் குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதாவின் அண்ணன் சத்ய பிரகாஷிற்க்கும் கோமதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கோமதியின் தம்பி அன்புவும் அனிதாவும் காதலித்துள்ளனர்.
அதன்பிறகு தனுஷ் குமாரை திருமணம் செய்து கொண்டால் அவர் ராணுவத்திற்கு சென்று விடுவார். அப்போது அன்புடன் காதலை தொடரலாம் என்ற நோக்கத்தில் அனிதா அவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அனிதா காதலை தொடர்ந்ததால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அனிதாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நீ அன்புடன் பேசுவது எனக்கு தெரியும். நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சு பாக்கல. திருமணத்திற்கு பிறகும் இப்படி எல்லாம் பண்ணா ஒரு மனுஷனுக்கு எவ்ளோ கஷ்டமாக இருக்கும் தெரியுமா? நான் மேலே போறேன். நீ பத்திரமா இரு. நீ உன் லைப் பாத்துக்கோ என மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை…
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…
தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…