Categories: சினிமா

சுச்சி லீக்ஸ்க்கு அப்புறம் என் வாழ்க்கையே.. அவுங்களால தான் நா உயிரோடயே.. மனம் திறக்கும் SMS பட நடிகை அனுயா..

Spread the love

2017-ம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் ஒரு புயல் வந்த காலம் என்றே சொல்லலாம். பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி ஒரு சூறாவளியை கிளப்பியது. ஆர்.ஜே. மற்றும் பின்னணி பாடகியான சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், தனுஷ் முதற்கொண்டு நடிகை அனுயா வரை பலரும் இந்த சுச்சி லீக்ஸ் வீடியோக்கள் மூலம் பல பிரபலங்களும் பல்வேறு சிக்கல்களில் சிக்கினர். ஆனால் சுசித்ராவோ அந்த வீடியோக்களை நான் வெளியிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில் இருக்கும் ஒரு வீடியோவைக் கூட நான் பார்த்தது இல்லை எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

#image_title

4.5லட்சம் ஃபாலோவர்களை கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தை வைத்து யாரோ இந்த சதி வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் சுசித்ரா குற்றம்சாட்டியிருந்தார். அப்படி அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியான வீடியோ மூலம் பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒரு அனுயா. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் பிரபலமானவர் அனுயா. இப்படத்தின் வெற்றிக்கு பின் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அனுயாவின், ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சுசித்ரா லீக்ஸ் தலைப்பின் கீழ் வெளியானது.

#image_title

அந்த வீடியோவில் உள்ளது நான் இல்லை எனக் கூறுவதற்கு பதிலாக, அந்த புகைப்படங்களை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் எனவும், தவறான எண்ணத்தில் பார்த்தால், தவறாகத் தான் தெரியும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார் அனுயா. அதன் பின் சில காலம் சினிமாவை விட்டே ஒதுங்கி தலைகாட்டாமல் இருந்து வந்த அனுயா, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு நேர்ந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

#image_title

அதில், மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் அந்த பிரச்சனையை நான் எப்படி எதிர் கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம். நான் இன்று உயிரோட இருக்க காரணமே குடும்பம் தான். அவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் என்பதால், புரிந்து கொண்டு எனக்கு துணையாக இருந்தார்கள். ஆனால், இது போன்று மார்பிங் வீடியோவில் சிக்கும் பெண்களுக்கு குடும்பம் துணை நிற்குமா, அந்த பெண்களின் வாழ்க்கை என்னவாகும் என்று எனக்கு தெரியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

#image_title

அதே போல சுசி லீக் பிரச்சனைக்கு பிறகு நான், சினிமாவைவிட்டு விலக நினைத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், எத்தனை நாட்கள் நான் வீட்டிற்குள் இருக்க முடியும், வீட்டில் இருந்ததால் என் மன அழுத்தம் அதிகமானதால், அதை கடந்து வந்தேன். இப்போது சினிமாவில் கூட பெண்களை விமர்சித்துதான் வசனம், பாடல் வருகிறது அதை ரசித்து பார்க்கிறார்கள். படத்தில் ஒரு ஐட்டம் பாடல் வந்தால் கைதட்டி பார்க்கும் ஆண்கள், அந்த பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடிய பெண்ணை கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டாங்க, என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

Archana

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

29 minutes ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

39 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

53 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

59 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

1 மணத்தியாலம் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

1 மணத்தியாலம் ago