90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவகுமார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் பழனிசாமி என்பதாகும். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையாவார். 1965 ஆம் ஆண்டு “காக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சிவக்குமார். தொடர்ந்து சரஸ்வதி சபதம் கந்தன் கருணை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். “கந்தன் கருணை” திரைப்படத்தில் இவர் முருகன் கதாபாத்திரம் என்று நடித்திருந்தார். முருகனின் வேடம் அப்படியே சிவகுமாருக்கு கச்சிதமாக பொருந்தியது.
அனைவரும் இவரை முருகனாக ரசித்தனர். தொடர்ந்து பல பக்தி படங்களில் நடித்தார் சிவக்குமார். திருமால் பெருமை காரைக்கால் அம்மையார் போன்ற இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றது. இவருக்கு நடிகர் என்ற பெயர் மட்டும் இல்லாமல் ஓவியர் , மேடை பேச்சாளர் என்ற பன்முகத் திறமைகளும் உள்ளது. மூத்த நடிகராக வலம் வரும் இவர் தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவருக்கு ஓவியம் என்பது மிகப்பெரிய பேஷனாக இருக்கிறது. தற்போது வரை அதை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் குறித்து ஒரு தகவல் வலைப்பேச்சு பிஸ்பி பகிர்ந்துள்ளார். அதாவது, “பொதுவாகவே படப்பிடிப்பு தளத்தில் ஆர்டிஸ்டிகளை கூப்பிட்டு உட்கார வைத்து ரொம்ப நேரம் கழித்து சூட்டிங்க்கு கூப்பிடுவது, காலையில் கூப்பிட்டு மாலை வரை உட்கார வைப்பது இதுவெல்லாம் பொதுவாகவே நடக்கும் ஒரு விஷயம்.
அது மாதிரி சிவகுமார் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அவர் கூட இருந்த ஆர்டிஸ்ட் ஒருவரை ரொம்ப நேரம் காக்க வைத்ததால் அவர் கடுப்பாகி, சிவகுமாரிடம் சென்று என்ன இப்படி பண்ணுறாங்க என்று அந்த இயக்குனரை கண்ணா பின்னா என்று திட்டி விட்டாராம். இதை பார்த்துக் கொண்டிருந்த சிவகுமார் நாம் நடிப்பதற்கு மட்டும் சம்பளம் கொடுக்கவில்லை கால்ஷீட் காத்திருத்தலுக்கும் சேர்த்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று சொன்னாராம். இதனை அடுத்து அந்த ஆர்டிஸ்ட் வாயே திறக்கவில்லையாம். நமக்கான சம்பளம் இந்த கால்ஷீட் காத்திருத்தல் சேர்த்து தான் என்பதை புரிந்து கொண்டாராம். என்பதை பகிர்ந்துள்ளார்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…