Categories: சினிமா

42 வயசுல இதை பண்ணதுக்கு அப்பா ரொம்ப.. தனது அக்காவின் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு வைரல்..!

Spread the love

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மெரினா படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 50 கோடி வசூல் செய்த படமா மான் கராத்தே படம் அமைந்தது.

அதன் அடுத்து இவருடைய ரெமோ படம் 25 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவக்கார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்துவிட்டார்.

இவர் சிறுவயதிலிருந்தே அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அப்பா மிலிட்டரியில் பணியாற்றியபோது உயிரிழந்தார் என்றும், அப்பா, அக்காவை நல்லா பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்ன்னு பல மேடைகளில் பேசியிருப்பார் SK. இந்நிலையில் இன்று இவருடைய அக்கா பிறந்தநாள் என்பதால் அவருடைய பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அக்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குழந்தை பெற்ற பின் எம்பிபிஎஸ் படிப்பது முதல் 38 வயதில் தங்கப் பதக்கத்துடன் எம்டி பட்டம் பெறுவது வரை, இப்போது 42 வயதில் FRCPஐ அடைவது வரை, எல்லா முரண்பாடுகளையும் தாண்டிடீங்க. அப்பா உண்மையிலேயே பெருமைப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகளோ சிவகார்த்திகேயன் அக்கா இவ்ளோ படிச்சிருக்காங்களா? என்று ஆச்சர்யப்பட்டுள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

9 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

10 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

10 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago