சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கமர்சியல் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். வேலைக்காரன், மாவீரன், சீமராஜா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் விருப்பமான நாயகனாக மாறினார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரபலமான நல்ல விமர்சனங்களை பெற்ற இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் தான் டான். காலேஜில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. இந்த படத்திற்கு பிறகு தான் பல நல்ல நல்ல கதைகள் சிவகார்த்திகேயனுக்கு அமைந்து சினிமாவில் ஏறுமுகத்தை கண்டார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் மீண்டும் சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சிபிச் சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனுக்காக படம் இயக்க வேண்டும் என்று வெகு நாளாக காத்திருந்திருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் படு பிஸியாக இருப்பதால் அவரால் டேட் கொடுக்க முடியவில்லை. இதனால் மனவிரக்திக்கு ஆளான சிபிச் சக்கரவர்த்தி தெலுங்கு சினிமா பக்கம் சென்று நானியை வைத்து படம் இயக்க முடிவு எடுத்து இருக்கிறார். அதனால் தற்போது SK -சிபி சக்கரவர்த்தி காம்பினேஷனில் படம் இல்லை. அது கேன்சல் ஆகிவிட்டது. எதிர்காலத்தில் இவர்கள் மீண்டும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…