#image_title
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். அவரை நடிப்புப் பல்கலைக் கழகம் என்றே சொல்லலாம். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
நாடக உலகில் இருந்து வந்ததால் அவருக்கு நாடகத்தின் மேல் அளவற்ற காதல் இருந்தது. அதனால்தான் சில ஆண்டுகள் அவர் தன்னுடைய நாடகக் குழு ஒன்றையும் தொடர்ந்து நடத்தி வந்தார். அடிக்கடி நாடகங்களை சென்று பார்க்கும் வழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. அப்படி நாடகங்கள் பார்க்கும் போது அவை பிடித்துவிட்டால் அவற்றை சினிமாவாக்கி நடிக்கவும் அவர் தயங்கியதில்லை.
அப்படி ஒரு முறை அவர் நகைச்சுவை நாடகம் ஒன்றை பார்க்க சென்று அதில் நடித்த ஒரு நடிகரை பார்த்து வியந்துள்ளார். இத்தனைக்கும் அவர் முழுநேர நடிகர் கூட இல்லையாம். அந்த நாடகத்தின் கதாசிரியராம். சித்ராலையா கோபு எழுதி நடித்த ஒரு நாடகத்தை பார்க்க சென்றுள்ளார். ஒரு பாட்டு வாத்தியார், இளமையான தோற்றத்துக்கு மாறும் வகையில் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார்.
அந்த மருந்தை அவரது மனைவி தவறுதலாக தண்ணீரில் கலந்துவிடுகிறார். இந்த தண்ணீரை குடித்த அந்த குடும்பத்தினர் அனைவரும் இளமையாக மாறிவிடுகின்றனர். ஆனால் இளமையாக மாறிய பின்னர் அவர்கள் ஏனோதானோவென்று நடந்துகொள்வதை நகைச்சுவையாக உருவாக்கியதுதான் அந்த நாடகம்.
தண்ணீர் குடித்து இளைஞராக மாறிய அந்த பாட்டு வாத்தியார் கர்நாடக சங்கீதத்தில் இருந்து மாறி மாடர்ன் உலக பாடல்களை பாடி ரசிகர்களை சிரிக்கவைத்துள்ளார். இந்த பாட்டு வாத்தியார் கேரக்டரில் நடித்தவர் சித்ராலையா கோபு. இவரின் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவாஜி கணேசன், நாடகம் முடிந்தவுடன், தனது டிரைவரை விட்டு, இந்த நாடகத்தில் நடித்த சித்ராலையா கோபு மற்றும் இயக்கிய கோபி ஆகிய இருவரையும் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
வந்தவர்களிடம் “கோபு, நீ நல்லா கதை எழுதுவன்னு தெரியும், நல்லா காமெடி பண்ணுவன்னு தெரியும். ஆனால் இவ்ளோ சிறப்பா நடிப்பன்னு எனக்குத் தெரியாதுடா” என வியந்து பாராட்டி விருந்து வைத்துள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…