நாடக நடிகராக இருந்து 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் சிவாஜி கணேசன். அதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். எம்ஜிஆர் உடன் இணைந்து கூட்டுக் கிளி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ள சிவாஜி தான் நடிக்கும் படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது வழக்கம். அதன்படி அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் அவருடைய நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.
கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பு தனியாக தெரிய வேண்டும் என்று மெனக்கெடும் சிவாஜி, இந்த கதை தனக்கு செட் ஆகாது என்று தெரிந்தும் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வெளியாகி சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கூட வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உச்சகட்ட தோல்வி. 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்க சுரங்கம். டி கே ராமமூர்த்தி இசையமைத்திருந்த இந்த திரைப்படத்திற்கு கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்த நிலையில் டி ஆர் ராமண்ணா இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இருந்தார்.
இந்த படத்தின் கதையை சிவாஜியிடம் ராமண்ணா சொன்ன போது அவருக்கு சரியாக திருப்தி இல்லை. நான் கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிப்பேன். இந்தத் திரைப்படம் அண்ணன் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய திரைப்படம். கதை அவருக்கு சரியாக இருக்கும். அவர் போலீஸ் அதிகாரியாக வந்து குற்றவாளிகளை கைது செய்தால் சரியாக இருக்கும் நான் அப்படி செய்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதனால் இந்த கதையை அண்ணன் எம்ஜிஆர் இடம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். ஆனால் சிவாஜியின் பேச்சை கேட்காத ராமண்ணா இந்த படத்தில் நீங்கள் நடித்தால் உங்களின் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு ஆக்சன் ஹீரோவாக மாறும் என்று கூறி சமாதானப்படுத்தி சிவாஜியை தங்க சுரங்கம் திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலேயே பெரும் தோல்வியை சந்தித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…