திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பூர்வமாக திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். இதனால் அமைச்சரவையில் பங்கேற்கவோ அல்லது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) போன்ற மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவோ முடியாத சூழல் மதிமுகவிற்கு ஏற்பட்டது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைய வைகோ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள தொகுதிகளுடன் சேர்த்து, தங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து, தவெக ஆதரவுடன் இடைத்தேர்தலை எதிர்கொள்ள மதிமுக திட்டமிட்டது. இது குறித்து ஆலோசிக்க நடத்தப்பட்ட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் கடையநல்லூர் எம்.எல்.ஏ பங்கேற்றார். ஆனால், சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் இக்கூட்டத்தைப் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டப் புறக்கணிப்பு குறித்துப் பேசிய சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன், தான் சட்டப்படி திமுக உறுப்பினராக இருப்பதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், உதயசூரியன் சின்னம் இல்லாமல் தனி சின்னத்தில் நின்றால் மீண்டும் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தினால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏவின் இந்த முடிவால் வைகோவின் புதிய அரசியல் கூட்டணி கனவிற்கு தற்பொழுது சிக்கல் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…