லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் காமெடி நடிகர் சிரிக்கோ உதயா. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்துள்ள இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல காமெடி நடிகராக இருந்த இவருக்கு சமீபத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து இடது கால் முட்டிக்கு கீழே எடுத்து விட்டனர். இவருடைய இந்த நிலையை அறிந்த பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து அவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
அதே சமயம் இந்த செய்தியை அறிந்த ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் சிரிக்கோ உதயா மருத்துவமனையில் இருந்தவாறு அளித்த பேட்டியில், முதலில் எனக்கு சர்க்கரை நோய் இருந்ததால் காலில் மூன்று விரல்களில் மட்டும் ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடலாம் என்று கூறியதும் நானும் சரி என்று கூறிவிட்டேன். முதலில் மூன்று விரல்கள் தான் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு பாதத்தில் இன்பெக்சன் ஆகிவிட்டதால் வேறு வழியே இல்லாமல் காலை எடுத்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பிறகு தான் அறுவை சிகிச்சை செய்து இடது காலை எடுத்தனர். இது ரொம்பவே எனக்கு கஷ்டமா இருக்கு. கண்ணே கலங்கிருச்சு. வயசானா எல்லோருக்கும் ஏதாவது ஒன்னு நடக்கும். எனக்கு கால் போய்விட்டது என்று நான் நினைத்துக் கொள்கிறேன். இப்போ நான் ஒரு குழந்தை மாதிரி தான் இருக்கேன்.
படுத்த படுக்கையா ஏதாவது ஒன்னு செய்யக்கூட மத்தவங்களோட உதவியதான் எதிர்பார்க்கிற. நடிகர் சங்கத்தில் இருந்து யாருமே எனக்கு உதவி பண்ணல. என்ன பொருத்தவரைக்கும் சினிமாவில் உதவி பண்ணக்கூடிய ஒரே ஆளு சந்தானம் மட்டும்தான். அவர்தான் சொன்னாரு சொன்னதை சொன்னபடியே செஞ்சாரு. சந்தானம் நிறைய உதவி பண்ணிட்டாரு என்று சிரிக்கோ உதயா எமோஷனலாக பேசியுள்ளார்.
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…