Categories: சினிமா

நகைய மாத்துனது யாரு..? விடாமல் சிஐடி வேலை பார்க்கும் முத்து.. மனோஜை காப்பாற்ற களமிறங்கும் ரோகினி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

Spread the love

சிறகடிக்க ஆசையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது நகையை மாத்துனது யார் என முத்து தொடர்ந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில் மனோஜ் அந்த 4 லட்சம் ரூபாயை தனது நண்பரிடம் தான் வட்டிக்கு வாங்கினேன் என்று கூறி அப்படியே மாற்றி பேசி விட்டார். மேலும் விஜயாவும் அவரை அடிப்பது போல் டிராமா போட்டு எப்படியோ அதிலிருந்து மனோஜை காப்பாற்றி விட்டார்.

இதனால் முத்துவுக்கு மனோஜ் மீது இருந்த சந்தேகம் தீரவில்லை. உடனே மனோஜ் கடன் வாங்கியதாக கூறிய அந்த நம்பரை சந்திக்க செல்கிறார் . அங்கு போய் மனோஜ் நண்பரிடம் பேச்சு கொடுக்க அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கக்கூடிய தகுதி இல்லை என்பதை புரிந்து கொண்டார். மேலும் மனோஜ்க்கும் அவர் கடன் கொடுக்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்டார்.

நகையை விற்று தான் அந்த பணத்தை ரெடி பண்ணி இருக்கான் என்பதை உணர்ந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இதனை மீனாவிடம் சொல்லி என்ன செய்யலாம் என ஐடியா கேட்கிறார். அப்போது அவர் எனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார் அவர் வெற்றிலையில் மை போட்டு கண்டுபிடித்து விடுவார். அவரிடம் போகலாமா என்று கேட்க உடனே முத்துவுக்கு ஒரு ஐடியா வந்துவிட்டது.

அந்த வகையில் மாந்திரீகம் மூலம் ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து பூஜை ரூமில் வைத்து யாருக்காக நகையை எடுத்து கவரிங் நகை வைத்தார் என்பது தெரிந்து விடும். ஏனென்றால் அப்படி மாற்றி வைத்தவர்கள் வாய் இழுத்துக் கொண்டு கோணவாயாக மாறி விடுவார்கள் என முத்து வீட்டிற்கு வந்து ஒரு பொய் கூறுகிறார். உடனே விஜயா மற்றும் மனோஜ் இருவரும் திருத்திருவென்று முழிக்கிறார்கள்.

இரண்டு பேருமே பதட்டத்துடன் பயம் கலந்து இருக்கும் பொழுது ரோகினி அங்கு வந்து ஆட்டத்தை கலைக்க முயற்சி செய்கின்றார். முத்து இந்த மாதிரி ஏதாவது ஒரு வேலையை பண்ணி உண்மையை கண்டுபிடித்தவர் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ரோகினி, விஜயா மற்றும் மனோஜ் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி சில டிப்ஸ்களை கூறுகின்றார். இதற்கிடையில் மனோஜ் செய்த விஷயங்களை பார்த்து ஸ்ருதிக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் வரத் தொடங்குகின்றது.

மீனாவின் நகையை எடுத்து விற்பனை செய்து அந்த நான்கு லட்சத்தை கொண்டு வந்து வைத்திருப்பார் என்பதை ஸ்ருதி புரிந்து கொள்கின்றார். இதைப் பற்றி ரவியிடம் சொல்லி நாம் எதையாவது உதவி செய்யலாமா என்று கேட்கிறார். அதற்கு ரவி ஏதாவது பண்ணி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வரப்போகுது, அமைதியாக இரு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறார். ஆனால் ஸ்ருதிக்கு உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. இதனால் சிஐடி வேலை பார்க்கப் போகின்றார். இந்த விஷயத்தில் மனோஜ் தப்பிப்பாரா அல்லது மாட்டிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mahalakshmi

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

22 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

31 minutes ago

என் வாழ்க்கை அவ்வளவுதான்… சாஸ்திரி பாலத்தில் இளைஞர் எடுத்த பகீர் முடிவு… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…

33 minutes ago