#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. டிஆர்பியிலும் தொடர்ந்து தற்பொழுது முன்னணி இடத்தை பிடித்து வருகிறது இந்த சீரியல். இந்நிலையில் இன்றைய சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
#image_title
முத்து -மீனா, ரவி -சுருதி, ரோகிணி – மனோஜ் என ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள மூன்று பெட்ரூம்களில் படுத்துக்கொள்ள தற்பொழுது விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் ஹாலில் இரவு நேரத்தில் படுத்து வருகின்றனர். இரவில் திடீரென விஜயாவிற்கு பாத்ரூம் வர ஹாலில் பாத்ரூம் இல்லை. ரவியின் ரூம் கதவை தட்ட அவர்கள் திறக்கவில்லை .இதைத்தொடர்ந்து மனோஜ் ரூமின் கதவை தட்ட அவர்களும் கதவை திறக்கவில்லை.
இதை தொடர்ந்து முத்து-மீனாவின் கதவைத் தட்டி எழுப்ப போக அண்ணாமலை,’ விஜயா வா இருவரும் கீழே ஒரு பாத்ரூம் இருக்கு தானே அங்க போயிட்டு வரலாம் என கூப்பிட்டு செல்கிறார். ஒருவழியாக இருவரும் பாத்ரூம் போயிட்டு வந்தவுடன் நைசாக விஜயா ‘ முத்துமீனாவை நம்ம தனி குடித்தனம் வைச்சிடலாம்’ என பேச்சை ஆரம்பிக்கிறார்.
ஆனால் அண்ணாமலை ‘ அவங்க மூணு பேரும் இங்கயே இருக்கட்டும். நம்ம கிளம்பிடுவோம்’ என்று பெரிய குண்டை தூக்கி போடுகிறார் .’நானும் நீயும் கிளம்பி போயி நம்ம அம்மா கூட போய் இருக்கலாம். இந்த வீட்டுக்கு வந்த மருமகள் யாரும் வெளியே போக வேணாம். நீ அப்படி யாராவது வெளியே போகணும்னு நினைச்சேனா நம்ம கிளம்பி போகலாம் என்று கூறி விஜயாவை திக்குமுக்காட செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…