விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் முத்து மற்றும் மீனாவிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவர்களின் ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றுதான். தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது ரவி ஸ்ருதியை கோவிலில் வைத்து திருட்டு கல்யாணம் செய்து கொள்ள, இதில் அப்பாவியான மீனா வந்து மாட்டிக் கொண்டுள்ளார். ரவி ஸ்ருதியை திருமணம் செய்ததை பார்த்த மீனா அவர்கள் இருவரையும் கண்டுபடி திட்ட, ஆனாலும் இருவரின் திருமணத்திற்கு அவரே சாட்சி கையெழுத்தையும் போட்டு விட்டார். இங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் மீனாவுக்கு.
ஸ்ருதியின் அப்பா ஸ்ருதியை காணோம் என போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க போலீஸ் வந்து அண்ணாமலையை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுகின்றனர். மொத்த குடும்பமும் தற்பொழுது போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. இந்நிலையில் முத்துவும் போலீஸ் ஸ்டேஷன் வர போலீஸ் விசாரணையில் சுருதியும் ரவியும் கோயிலில் திருமணம் செய்து கொண்டதும், சாட்சி கையெழுத்து மீனாதான் போட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
இதனால் முத்து கோபத்தில் மீனாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டு, கோபமாகவும் பேசுகிறார். காதல் திருமணம் செய்து கொண்டு ரவியும், ஸ்ருதியும் நைசாக எஸ்கேப்பாகிவிட, சாட்சி கையெழுத்து போட்ட மீனா தற்பொழுது அனைவரும் முன்னிலையிலும் குற்றவாளியாக நிற்கிறார். இனி முத்து மீனாவை பிரிய போவது உறுதி. இருவருக்குள்ளும் சண்டை வரப்போவதும் உறுதி. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை. இதோ ப்ரோமோ வீடியோ…