Categories: சினிமா

அட சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி எம்ஜிஆர் கூடயே நடிச்சிருக்காங்களா?.. இந்த விஷயம் இத்தனை நாள் தெரியாம போச்சே..!

Spread the love

விஜய் டிவியில் டிஆர்பி யில் முதலிடத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மற்ற சீரியல்களுடன் ஒப்பிடும்போது சூப்பர் ஹிட் ஆக இந்தத் தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. முத்து மற்றும் மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புதுமுகங்கள் மற்றும் சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளுக்கு மேல் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமி உள்ளிட்ட மற்ற தொடர்கள் இந்த சீரியலின் ரேட்டிங்கை தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இந்த சீரியலில் ரோகிணியின் உண்மை முகம் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிய விஜயா அவரை ஒரு அடிமைத்தனமாக நடத்தி வருகிறார். சில உண்மைகள் தெரிய வந்ததுமே இப்படி நடத்தும் குடும்பத்தினர் ரோகினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தால் என்ன ஆகும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அந்த கதைக்களம் எப்போது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்க சீரியல் தற்போது பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோ முத்துவின் பாட்டியாக நடிகை ரேவதி நடித்து வருகின்றார். சிறகடிக்க ஆசை சீரியலில் அதிகம் பவர்ஃபுல்லான ரோல் இவருடையது தான். வில்லி மாமியார் விஜயாவை இவரைப் பார்த்தால் அடங்கிப் போவார். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் ரேவதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சீரியலில் நடித்து வருவதன் மூலம் ரேவதி பாட்டிக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் தற்போது கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சினிமா ஒன்றும் இவருக்கு புதிது அல்ல. சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக நடித்து வந்துள்ளார். தனிப்பிறவி என்ற படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு படத்தில் நடிகர் சிவகுமாரின் முதல் ஜோடியாகவும் இவர் நடித்துள்ளார். தனது இளம் வயதில் இருந்து தற்போது வரை 80 வயதாகும் இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருகின்றார்

Nanthini

Recent Posts

“டாக்டர் சி.ஜோசப் விஜய் – முதல்வர்”.. அஜய் ஞானமுத்துவின் மாஸ் பிளான்… தேர்தல் வெற்றியை சினிமா ஸ்டைலில் கொண்டாட துடிக்கும் இயக்குனர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…

2 minutes ago

BREAKING: கொளத்தூரில் விழுந்த கோட்டை!… சொந்தத் தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்டாலின்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…

23 minutes ago

“விஜய்யை முதல்வராக்கி விட்டீர்கள்!”… மகனின் மாபெரும் வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட தந்தை… எஸ்.ஏ. சந்திரசேகர் ஆங்கில ஊடகத்திற்கு கண்ணீர் மல்கப் பேட்டி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…

27 minutes ago

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

37 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

46 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

56 minutes ago