Categories: சினிமா

சூர்யாவுக்கு முன்னாடி எந்த நடிகர் சினிமாவுல அதை பண்ணி இருக்காரு?.. அவன் ஜாதகத்திலேயே அது இருந்துச்சு.. மேடையில் எமோஷனலான சிவகுமார்..!

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. இந்தத் திரைப்படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் கண்ணாடிப் பூவே மற்றும் கனிமா ஆகிய பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. மேலும் சில படங்கள் நேற்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகியது. மேலும் படத்தில் அதிரடியான ட்ரெய்லரும் நேற்று வெளியானது.

கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசியாக இதே நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெற்றது. ஆடியோ லான்ச் டிக்கெட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் வெற்றி விழாவுக்கு அதையே கொண்டு வந்து உள்ளே வரலாம் என்று பேசியது படம் வெளியானதும் பயங்கர ட்ரோல் ஆனது. இந்த நிலையில் ரெட்ரோ படம் கண்டிப்பாக அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் பதில் அடி கொடுக்கும் என்று தெரிகின்றது. நடிகர் சூர்யாவின் தந்தையும் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் நேற்று ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடை ஏறி பேசினார். அதில், சூர்யாவிற்கு சினிமாவில் பெரிதாக நாட்டம் கிடையாது. கார்மெண்ட்ஸ் கம்பெனியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒருமுறை என்னோட நண்பர் வீட்டிற்கு வந்தபோது அவர் ஜோசியர் என்பதால் சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை பார்த்து சூர்யா சினிமாவில் கலக்குவார் என்று கூறினார். உடனே அவனுக்கு சினிமாவில் நடிக்கிற இன்ட்ரஸ்ட் இல்ல என்று கூறினேன். பிறகு இயக்குனர் வசந்த் ஒருமுறை விமான நிலையத்தில் சூர்யாவை சந்தித்த நிலையில் போட்டோ டெஸ்ட் பண்ணனும் என்றார். 200 சதவீதம் நம்பிக்கை இருக்கு சூர்யா நல்லா பண்ணுவார் என்று நேருக்கு நேர்படத்தில் நடிக்க வச்சாரு. அதன் பிறகு ஒவ்வொரு இயக்குனரும் சூர்யாவை செதுக்கி இன்று இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 22 வயசு வரைக்கும் சூர்யா என்னோட ஷூட்டிங் வந்து பார்த்தது கிடையாது. சூர்யா படத்தில் நடித்தார்.

சூர்யாவின் கண்கள் பல பெண்களின் தூக்கத்தை கெடுக்க போவது என்று சொன்னாங்க. என் மகனை நடிகனாகிய மணிரத்தினம் வசந்த் பாதம் தொட்டு வணங்குகிறேன். முழுமையான நடிகனாக வேண்டும் என்பதற்காக தினமும் நடனத்துக்கும் சண்டைக்கும் பயிற்சி எடுத்துக் கொள்வார். நான்கு மணி நேரம் ஜீன்ஸ் அணிந்து கொண்டு நடனப் பயிற்சி செய்வார். பீச்சில் சண்டை மாஸ்டர்களுடன் மணிகணக்காக பயிற்சி எடுத்துக் கொண்டார். சூர்யாவுக்கு முன்னாடி சினிமாவுல எந்த நடிகர் சிக்ஸ் பேக் வைத்திருக்கார் என்று தனது மகன் குறித்து சிவகுமார் உணர்ச்சி பொங்க பேசினார். தன்னை பற்றி அப்பா பெருமையோடு பேசுவதை கேட்டு நடிகர் சூர்யா கண்கலங்கியபடி அமர்ந்திருந்தார்.

Nanthini

Recent Posts

கடவுளே…! சைக்கிளில் சென்ற 12 வயது சிறுமி… மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி பேருந்து…. இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பள்ள முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி மீது அதிவேகமாக…

4 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி… ஸ்டாலினுக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி?…. தாராபுரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ அரசியல் ஆபரேஷன்….!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

12 minutes ago

“விழுவது போல நடித்து…” 73 வயது முதியவரை  திசைதிருப்பிய பெண்… ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டி அபேஸ்… அதிர வைக்கும் வீடியோ வைரல்..!!

சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…

12 minutes ago

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

19 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு…. செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியா?…. கூட்டணிக்குள் பெரும் புயல்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…

22 minutes ago

“என்னை காப்பாத்துங்க…” அலறி சத்தம் போட்ட சிறுமி…! வழிமறித்து அத்துமீறிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…

28 minutes ago