சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், முத்துவையும் மீனாவையும் திட்டி விட்ட வருத்தத்தில் ரோகினியின் அம்மா அங்கிருந்து புறப்படுகிறார். பிறகு வித்யாவின் வீட்டில் அமர்ந்து கொண்டு நடந்ததை நினைத்து அவர் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ரோகினி அங்கு வந்து இனிமே எந்த பிரச்சனையும் இல்லை இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன் என்று கூறுகிறார். உடனே அவருடைய அம்மா கோபப்பட்டு என்னால இனிமே நிம்மதியா தூங்க முடியாது நான் பெரிய பாவம் பண்ணிட்டேன், முத்துவும் மீனாவும் ரொம்ப பாவம் அவங்க மனச நான் கஷ்டப்படுத்திட்டேன் என்று கூறி புலம்புகிறார். உடனே ரோகினி அம்மா இனிமே அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் வராது தேவை இல்லாம நீ பேசி வருத்தப்பட்டு இருக்காதே என்று கூறுகிறார்.
உடனே அவருடைய அம்மா உன் மகனின் உயிரை காப்பாற்றியதே அவங்கதான் அவங்க மனச கஷ்டப்படுத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு நீ எல்லாம் ஒரு பெண்ணே இல்ல என்று கூறி திட்டுகிறார். பிறகு வித்யா இருவரையும் சமாதானப்படுத்துகிறார். பின்னர் முத்துவும் மீனாவும் மொட்டை மாடியில் அமர்ந்து நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மீனா அழுது கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் விஜயாவும் ரோகிணியும் அங்கு வந்து இருவரையும் கிண்டல் செய்கின்றனர். அப்போது முத்து விஜயாவை திட்டுகிறார். நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மன்னிச்சுடுங்க என்று கூறிவிட்டு மீனா அங்கிருந்து கிளம்புகிறார்.
இதனைத் தொடர்ந்து மீனா மன வருத்தத்தில் இருப்பதால் அவரை சமாதானப்படுத்த முத்து அவருடைய அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மீனாவின் தங்கையும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் சத்யா உள்ளே வருகிறார். காலேஜ் போயிட்டு ஏன் சீக்கிரமா வந்துட்ட என்று மீனா கேட்க, நான் காலேஜுக்கு நிறைய நாட்கள் லீவு எடுத்ததால் எக்ஸாம் எழுத வேண்டாம் என்று கூறி விட்டார்கள் என்று புலம்பிக்கொண்டே என் லைஃபே போயிடுச்சு என சத்தியா அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் முத்து விடு எல்லாம் நான் பார்த்துக்கிறேன் தேவையில்லாம அழுதுட்டு இருக்காத நீ எக்ஸாம் எழுதுவ அதுக்கு நான் பொறுப்பு என்று கூறி சமாதானப்படுத்துகிறார்.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…