#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ் இன் கலாட்டாவில் வீடு முழுவதும் சிரித்து தள்ளிவிட்டார்கள். அதேபோல் பக்கத்தில் வேலை செய்யும் தாத்தா வைத்த முட்டைதான் அது என்று மனோஜ் ஷோரூமில் வேலை செய்யும் பையன் சொன்னவுடன் எல்லோரும் கலாய்த்து சிரித்தனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் அனைவரும் மனோஜை திட்டினர். என்ன ஒரு விஷயத்தை ஆராயாமல் இப்படி ஏன்டா பண்ற என்று கலைக்கிறார்கள். விஜயாவும் மனோஜை திட்டுகிறார் உன்னால தீசட்டி எடுத்து என் கையே வெந்து போச்சுடா என்று திட்டுகிறார். அடுத்ததாக ஸ்ருதி தன்னுடைய தோழியின் பர்த்டே பார்ட்டிக்கு வரச் சொல்லி ரவியை கூப்பிடுகிறார்.
ஆனால் ரவி தனது பாஸ் வேலைக்காக கூப்பிட்டு இருக்கிறார் அங்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார். சுருதி தனியாக தனது தோழியின் பார்ட்டிக்கு செல்கிறாள். ஆனால் அங்கு பார்த்தால் அங்கு ரவி வந்திருக்கிறார். ஸ்ருதி ரொம்ப கோபமடைந்து வெளியே சென்று விடுகிறார்.
பின்னர் ரவி ஸ்ருதியை பார்த்து நான் என்னோட வேலைக்காக தான் நான் வந்தேன். என்னை சந்தேகப்படுறியா என்ன என்று ரவி கேட்கிறார். அப்படி இல்ல ரவி நான் சந்தேகப்படவில்லை எனக்காகவும் நீ டைம் ஸ்பென்ட் பண்ணணும் ஆனால் நீ பண்றது சரியில்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
அதற்கு அடுத்ததாக பார்வதிக்கு பூ கொடுப்பதற்காக மீனா செல்கிறாள். பார்வதி ரொம்ப மனசு வருத்தப்பட்டு மீனாவிடம் பேசுகிறார். என்ன மீனா விஜயா தான் என்னை புரிஞ்சுக்கலை நீயுமா என்னை புரிஞ்சுக்கல நான் என்ன தப்பு பண்ணேன் என்று கேட்கிறார்.
பின்னர் ரோகினி வந்து பணம் கொடுத்த விஷயத்தை உளறி விடுகிறார் பார்வதி, ரோகினி தன்னுடைய தாலி செயினை அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தார் என்று கேட்டவுடன் மீனா அதிர்ச்சி அடைந்து விட்டார். ரோகிணி அப்படி பண்ணக்கூடிய ஆள் இல்லையே எனக்காகவா அப்படி பண்ணுனாங்க என்று குழப்பத்திலேயே மீனா இருக்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…