சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், முத்து சத்யாவுக்கு உதவ சென்று போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதால் அவரை வெளியே எடுக்க மீனா ஸ்ருதியிடம் உதவி கேட்கிறார். உடனே ஸ்ருதி தனது அம்மாவுக்கு போன் செய்து என்னுடைய தோழி ஒருவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார் உங்களால் முடிந்தால் அப்பா கிட்ட சொல்லி அவருக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார். பிறகு யார் என்று விசாரிக்க முத்து என்று கூறியதும் உதவி செய்ய அவர்கள் மறுத்து விடுகின்றனர். பிறகு மீனா என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே முத்துவிடம் சென்று பேசுகிறார். வீட்டுக்குச் சென்று நான் சவாரிக்கு போய் இருக்கேன் காலைல வந்துருவேன் என்று சொல்லிரு உண்மைய சொன்னா அப்பா கஷ்டப்படுவார் என்று முத்து கூறுகிறார்.
சரி என்று கூறிவிட்டு மீனா அங்கிருந்து புறப்பட வீட்டிற்கு சென்றதும் விஜயா எங்கே போயிட்டு இத்தனை மணிக்கு வர உன் புருஷன் எங்க என்று கேட்க மீனா பொய் சொல்கிறார். பிறகு விஜயா ஸ்ருதி அம்மா வந்து எல்லாத்தையும் சொல்லிட்டு போய்ட்டாங்க உங்களால நாங்க இன்னும் எத்தனை அசிங்கத்தை அனுபவிக்கணும் என்று விஜயா திட்டுகிறார். அவருடன் சேர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் என அனைவருமே முத்துவை திட்டிக் கொண்டிருக்கின்றனர். மாமனார் தனக்கு சாதகமாக பேசுவார் என்று மீனா எதிர் பார்த்த நிலையில் அவரும் என்கிட்ட எதுக்குமா இதை மறைச்ச நீ இப்படி பண்ணுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, அவன் தான் அறிவு கெட்ட தனமா அப்படி பண்ணிட்டு இருக்கானா நீ என்கிட்ட இதை சொல்லி இருக்க வேண்டாமா என்று கூறி மீனா விடம் கோபப்படுகிறார்.
பிறகு அனைவரும் அங்கிருந்து செல்ல விஜயா உனக்கு எப்போதும் சாதகமாக பேசும் அவரே உன்னை அசிங்கப்படுத்திட்டு போயிட்டாரு இதுக்கு மேல நீ அசிங்கப்படணுமா என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பிறகு அடுத்த நாள் முத்துவை வெளியே எடுக்க மீனாவுடன் அவருடைய தம்பி சத்யாவும் தங்கை சீதாவும் செல்கின்றனர். சத்யாவால் தான் முத்துவுக்கு இந்த நிலைமை என்று கூறி சீதா அவரை திட்டுகிறார்.
பிறகு இன்ஸ்பெக்டர் வந்ததும் மீனா உண்மையைக் கூறி முத்துவை வெளியே எடுக்கிறார். இதனைத் தொடர்ந்து சத்யா தனது தவறை உணர்ந்து முத்துவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டிற்கு சென்று அப்பாவை சமாதானப்படுத்த கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…