இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் திட்டமிட்டு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளைப் போல தபால் அலுவலகமும் ஏராளமான முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்காக செயல்படுத்தி வருகின்றது. வங்கிகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு வட்டி விகிதம் வழங்கப்படுவதால் மக்கள் பலரும் இதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். போஸ்ட் ஆபீஸ் செயல்படுத்தி வரும் திட்டங்களில் முக்கியமான ஒன்றுதான் கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா திட்டம். ஆயுள் காப்பீடு மற்றும் பிற பலன்களை வழங்கும் இந்த திட்டம் திரும்ப பணம் பெரும் ஒன்றாகும். கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் முதலீட்டாளர் வெறும் 95 ரூபாய் மட்டும் முதலீடு செய்தால் சுமார் 14 லட்சம் உதிர்வு தொகையாக கிடைக்கும். இதில் காப்பீட்டுதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டால் மொத்த உத்திரவாத தொகையும் போனஸ் உடன் சேர்த்து அவருடைய வாரிசு அல்லது நாமினிக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் பாலிசி காலம் 40. இதில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 19 ஆகும். அதிகபட்சம் 20 வயதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு பாலிசிக்கு 45 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். முதிர்வுக்கு முன்பாக இந்த திட்டத்தில் இருந்து முதலீட்டாளருக்கு பணம் வழங்கப்படும்.
மேலும் இந்த பாலிசி மூலம் போனசையும் முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினமும் 95 ரூபாய் வீதம் மாதத் தவணையாக 2853 செலுத்த வேண்டும். முதலீட்டாளர் தன்னுடைய 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும்போது பாலிசி காலம் 20 ஆண்டுகளாக இருக்கும். இதில் ஏழு லட்சம் மொத்த உத்திரவாத தொகை ஆகும்.
ஆண்டுக்கு 32,735 செலுத்தும்போது முதிர்ச்சியின் போது சுமார் 14 லட்சத்தை முதலீட்டாளர்கள் பெற முடியும். இதில் தொகையை காலாண்டு, அரையாண்டு அடிப்படையிலும் செலுத்தி கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தில் முதலீட்டாளர் பணத்தை திரும்ப பெறலாம் என்பதும் கூடுதல் பலன் ஆகும். எனவே நீங்கள் குறைந்த முதலீட்டில் பணம் சேர்க்க விரும்பினால் இந்த திட்டத்தில் உடனே இணையுங்கள்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…