Breaking: முருகன் பாடல் சர்ச்சை “விஜய்க்கு சம்மந்தமில்லை” மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், பாடகர் வேல்முருகன் ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற புகழ்பெற்ற பக்திப் பாடலை விஜய் புகழ் பாடும் வகையில் வரிகளை மாற்றிப் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புனிதமான கடவுள் பாடலை அரசியல் ஆதாயத்திற்காகச் சிதைத்ததாகக் கூறி முருக பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் வேல்முருகன் மற்றும் கட்சியின் தலைவர் விஜய் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறிய நிலையில், முருகப் பெருமானின் புகழை இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என தவெக ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சை முற்றிய நிலையில் விளக்கம் அளித்த பாடகர் வேல்முருகன், மேடையில் இருந்த கூட்டத்தை உற்சாகப்படுத்த எதார்த்தமாகவே அந்தப் பாடலைப் பாடியதாகவும், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்தார். தனது செயலால் பக்தர்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த மாற்றப்பட்ட பாடலுக்கும் கட்சியின் தலைவர் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், அவர் மேடையில் இருந்தபோது தான் தன்னிச்சையாகவே பாடியதாகவும் வேல்முருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago