#image_title
சினிமாவில் வாழ்ந்து வெற்றி பெற்ற பல பிரபலங்களின் வாழ்க்கை தற்போது வரலாறாக படம் ஆக்கப்பட்டு வருகின்றது. பயோபிக் என்பது தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி தலைவி என்ற பெயரில் நடிகை கங்கணா ரணாவத் நடித்திருந்தார்.
நடிகை சாவித்திரி வாழ்க்கையை மகாநடி என்கின்ற பெயரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் அடுத்ததாக மீண்டும் ஒரு பெண் பிரபலத்தின் வாழ்க்கையை படமாக்க இருக்கின்றார். அவர் யார் என்றால் பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி தான்.
மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது வாங்கிய முதல் பெண் பாடகி ஆவார். தனது 10 வயதில் வீணையில் கை தேர்ந்த சுப்புலட்சுமி பாடலுடன் தன் வீணை இசையை சேர்த்து பாடி அசத்தினார். சிறுவயதிலேயே சிறிதும் அச்சமில்லாமல் பாடல் பாடி அனைவரையும் அசர வைத்தவர். இயக்குனர் கே சுப்பிரமணியம் இயக்கத்தில் சேவா சதனம் எனும் திரைப்படத்தில் முதன்முதலாக பாடி நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் 1938 ஆம் ஆண்டு வெளியானது. இவர் டிஎஸ் சதாசிவம் என்பவரை 1940 இல் சென்னையில் உள்ள திருநீர் மலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. 1954 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவரின் வாழ்க்கை கதையை தற்போது படமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
பெங்களூருவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றது. சுப்புலட்சுமி வேடத்தில் நடிகை திரிஷா அல்லது நயன்தாரா யாராவது ஒருவர் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகின்றது. இருப்பினும் நடிகை திரிஷாவுக்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆனால் நடிகை திரிஷா இதுவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ஓடவில்லை. ராங்கி திரைப்படம் மட்டுமே சுமாரான வெற்றியை கொடுத்தது. ஆனால் நடிகை நயன்தாரா நடித்த தனிநாயகி கதைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…