#image_title
சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றியா இயக்குனர் மற்றும் நடிகராவார். 1980களில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.
2002 ஆம் ஆண்டு இவரது தந்தை இயக்கிய “காதல் அழிவதில்லை” திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, போடா போடி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சிம்பு.
2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு. அதற்குப் பிறகு சற்று உடல் எடை கூடியதால் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்தார் சிம்பு. அந்த கடினமான பயண வீடியோவை சிம்பு வெளியிட்டார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். அதன்பிறகு இவரை Atman சிம்பு என்றும் ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.
சமீபத்திய வருடங்களில் சிம்பு எந்த ஒரு படங்களில் கமிட்டானாலும் அவர் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை படத்தை முடித்து கொடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் பக்கத்தில் கம்ப்ளைன்ட்கள் எழுந்தது. தற்போது அதையெல்லாம் சரிபடுத்திக் கொண்டு மீண்டும் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் சிம்பு. கமல்ஹாசனுடன் இணைந்து இவர் நடித்த ThugLife திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்பு பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கதை கேட்டு அந்த கதை மிகவும் பிடித்து போய் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார். இந்தப் படத்தின் சூட்டிங் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரலில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தையாவது விரைவில் முடித்து வெளியிடுவாரா சிம்பு என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியச் சீட்டு வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசு ஊழியர்கள் பெறும்…
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு இடத்தில் மக்களை சந்திக்க சென்றார். அவர் காரை விட்டு இறங்கியவுடன் இளைஞர் ஒருவர் ஜோதிமணி…
இப்போது அனைவருடைய வீடுகளிலும் கேஸ் அடுப்பு உள்ளது. இதனை தினமும் சமையலுக்கு பயன்படுத்துவதால் எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்ற விடாப்பிடியான…
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் தணிக்கைச் சிக்கல்களால் தள்ளிப்போயுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பத்தில், சேலம் - சென்னை புறவழிச்சாலையில் அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக…
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணியின் பாமகவும் நேற்று இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று இரவில்…