கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் “தக் லைஃப்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் சிலம்பரசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவலை தொடர்ந்து ஜெயம் ரவி இத்திரைப்படத்தில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் வந்தது.
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் குரல் எழுப்பி உள்ளாராம். அதாவது ஐசரி கணேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு “கொரோனா குமார்” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தார். அத்திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது.
அதற்காக சிம்புவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அட்வான்ஸும் வழங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பிற்கு சிம்பு ஒத்துழைப்பு தராததால் பணத்தை திரும்ப கொடுக்கும்படி நீதிமன்ற படிகளை ஏறினார் ஐசரி கணேஷ். இந்த விவகாரத்தில் சிம்புவின் தரப்பில் இருந்து சிம்பு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறிவந்தனர். ஆனால் இந்த பிரச்சனை ஓய்ந்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது “தக் லைஃப்” திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என FEFSI அமைப்பிடம் தயாரிப்பாளர் சங்கம் “தக் லைஃப்” பட படப்பிடிப்பின்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனராம். ஆனால் கொரோனா காலகட்டத்தில் FEFSI அமைப்பிற்கு மணிரத்னம் பல உதவிகளை செய்தார். ஆதலால் FEFSI அமைப்பு மணிரத்னம் திரைப்படத்தின்போது வேலை நிறுத்தம் செய்ய தயக்கம் காட்டுகிறார்களாம். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால், FEFSI அமைப்பின் தலைவர் நேராக மணிரத்னத்திடமே சென்று இந்த பிரச்சனையை குறித்து பேசினார்களாம்.
அதன் பின் மணிரத்னம், சிம்புவை அழைத்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் என்று கூற, சிம்பு இந்த பிரச்சனையை தீர்க்க தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…